/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பள்ளி மாணவர்களுக்கு காவல் துறை விழிப்புணர்வு
/
பள்ளி மாணவர்களுக்கு காவல் துறை விழிப்புணர்வு
ADDED : செப் 12, 2025 05:09 AM

சிதம்பரம்: பள்ளி மாணவர்கள் சுவர் ஏறி குதித்து வெளியேறும் வீடியோ வெளியா னதை தொடர்ந்து, ராமசாமி செட்டியார் பள்ளியில் காவல் துறை சார்பில் விழிப்புணர்வு முகாம் நடந்தது.
சிதம்பரம் ராமசாமி செட்டியார் பள்ளி மாணவர்கள், பள்ளியின் பின்புற சுற்று சுவர் வழியாக, ஏறி குதித்து வெளியில் வந்து, மீண்டும் பள்ளிக்குள் செல்லும் வீடியோ சமூக வளைதளத்தில் வைரலானது.
அதனை தொடர்ந்து, சிதம்பரம் நகர காவல் துறை சார்பில், மாணவர்களுக்கு விழிப்புணர்வு முகாம் நடந்தது தலைமை ஆசிரியர் ஜெயராமன் தலைமை தாங்கினார்.
நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் அம்பேத்கர் பங்கேற்று மாணவர்கள் மத்தியில், கல்வி, ஒழுக் கம், உடற்பயிற்சி மற்றும் விளையாட்டின் அவசியம், போதையால் ஏற்படும் தீமைகள், போக்குவரத்து விதிகள் குறித்து பேசினார்.