ADDED : ஜன 13, 2026 05:29 AM

அ நிறம் | அளவு
வேப்பூர்: சென்னை - திருச்சி, கடலுார் - சேலம் தேசிய நெடுஞ்சாலைகள் இணையும் இடத்தில் வேப்பூர் உள்ளது. இப்பகுதியில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் கடந்து செல்கிறது. இதனால், வேப்பூர் கூட்டுரோட்டில் 24 மணிநேரமும் போக்குவரத்து உள்ளது. கடந்த 9ம் தேதி வேப்பூர் அடுத்த பாசாரில் தே.மு.தி.க., மாநில மாநாட்டிற்கு வந்த வாகனங்கள், மாற்று பாதையில் செல்ல வேப்பூர் கூட்டுரோட்டில் சாலையின் குறுக்கே போலீசார் பேரிகார்டு அமைத்தனர். மாநாடு முடிந்தும் பேரிகார்டு அகற்றாததால், போக்குவரத்திற்கு இடையூறாக உள்ளது.
போக்குவரத்து சரிசெய்ய அமைக்கப்பட்ட பேரிகார்டு தற்போது அதே வாகன போக்குவரத்திற்கு இடையூறாக மாறியுள்ளது.
