தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/போக்குவரத்திற்கு இடையூறு: சிறுபாக்கம் போலீசார் அதிரடி

போக்குவரத்திற்கு இடையூறு: சிறுபாக்கம் போலீசார் அதிரடி

போக்குவரத்திற்கு இடையூறு: சிறுபாக்கம் போலீசார் அதிரடி


UPDATED : அக் 12, 2026 04:23 PM

ADDED : அக் 12, 2026 04:06 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 12, 2026 04:23 PM ADDED : அக் 12, 2026 04:06 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சிறுபாக்கம்: சிறுபாக்கம் பகுதிகளில் போக்குவரத்திற்கு இடையூறாக நின்ற வாகனங்களை போலீசார் அகற்றினர்.

சிறுபாக்கம் ஊராட்சியில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இங்கு, பல்வேறு அரசு அலுவலகங்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் உள்ளதால், சுற்றுப்புற கிராம மக்கள் தங்களின் சொந்த தேவைகளுக்கு தினசரி சிறுபாக்கம் வந்து செல்கின்றனர். இந்நிலையில், சிறுபாக்கம் பஸ் நிலையம் மற்றும் கடை வீதிகளில் போக்குவரத்திற்கு இடையூறாக வாகனங்களை நிறுத்துவதால் அப்பகுதியில் தினசரி போக்குவரத்து பாதிக்கிறது.

அதனையொட்டி, சிறுபாக்கம் சப் இன்ஸ்பெக்டர் பாரதி மற்றும் போலீசார் நேற்று பஸ் நிலையம் மற்றும் கடை வீதிகளில் போக்குவரத்திற்கு இடையூறாக நின்ற வாகனங்களை அகற்றி போக்குவரத்தை சீரமைத்தனர். மேலும், போக்குவரத்திற்கு இடையூறாக வாகனங்களை நிறுத்த கூடாதென வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை விடுத்தனர். அதேபோல், அடரி, மங்களூர் உள்ளிட்ட பகுதிகளிலும் போக்குவரத்துக்கு இடையூறாக நின்ற வாகனங்களை போலீசார் அகற்றினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us