/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
விவசாய தொழிலாளர் சங்க போராட்டம் போலீசார் அனுமதி மறுப்பு: கடலுாரில் பரபரப்பு
/
விவசாய தொழிலாளர் சங்க போராட்டம் போலீசார் அனுமதி மறுப்பு: கடலுாரில் பரபரப்பு
விவசாய தொழிலாளர் சங்க போராட்டம் போலீசார் அனுமதி மறுப்பு: கடலுாரில் பரபரப்பு
விவசாய தொழிலாளர் சங்க போராட்டம் போலீசார் அனுமதி மறுப்பு: கடலுாரில் பரபரப்பு
ADDED : டிச 18, 2024 07:16 AM

கடலுார் : கலெக்டர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்த போலீசார் அனுமதி மறுத்ததால், தொழிலாளர் சங்கத்தினர் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 5000 ரூபாய், விவசாய தொழிலாளர்களுக்கு 2ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்மாநில விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில், கடலுார் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் அறிவித்திருந்தனர்.
இதன்படி நேற்று காலை 10.30மணிக்கு, சங்கத்தின் மாவட்ட செயலாளர் முருகையன், இந்திய .கம்யூ., மாவட்டசெயலாளர் துரை, ஏ.ஐ.டி.யூ.சி.,மாவட்ட தலைவர் குளோப், மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன், இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் மாவட்டசெயலாளர் லட்சுமி உட்பட 50க்கும் மேற்பட்டோர் கலெக்டர் அலுவலகம் முன் திரண்டனர்.
போலீசார் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதியில்லை என தெரிவித்தனர். இதனால் சங்க நிர்வாகிகளுக்கும், போலீசாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆர்ப்பாட்டம் நடத்தினால் கைது செய்வோம் என போலீசார் எச்சரித்தனர். இதையடுத்து சங்க நிர்வாகிகள் கலெக்டரிடம் மனு கொடுக்க முடிவு செய்தனர். தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் முருகையன் தலைமையில் மாவட்டதலைவர் சுப்பிரமணியன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் கிருஷ்ணமூர்த்தி, தணிகாசலம், மணவாளன், ஆறுமுகம், குப்புசாமி உள்ளிட்டோர் கலெக்டரை நேரில் சந்தித்து கோரிக்கை மனுவை கொடுத்தனர்.