/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வீட்டில் திருட்டு முயற்சி போலீஸ் விசாரணை
/
வீட்டில் திருட்டு முயற்சி போலீஸ் விசாரணை
ADDED : நவ 09, 2025 06:21 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: ஓய்வுபெற்ற நெடுஞ்சாலைத்துறை ஊழியர் வீட்டில் மர்ம நபர்கள் திருட முயற்சித்தது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
கடலுார் அடுத்த பாதிரிக்குப்பம் முருகேசன் நகரை சேர்ந்தவர் நடராஜன், 77; ஓய்வு பெற்ற நெடுஞ் சாலைத்துறை ஊழியர்.
இவர் கடந்த சில தினங்களுக்கு முன், வீட்டை பூட்டிவிட்டு சென்னைக்கு சென்று விட்டார். நேற்று காலை அவரது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது.
இதைப்பார்த்த பக்கத்து வீட்டார் சென்னையில் இருந்த நடராஜனுக்கு தகவல் அளித்தனர்.
தகவலின் பேரில், திருப்பாதிரிப்புலியூர் போலீசார் நேரில் விசாரணை மேற்கொண்டனர். ஆனால், வீட்டில் திருட்டு நடந்திருக்க வாய்ப்பில்லை என போலீசார் தெரிவித்தனர்.

