/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பைக் திருடிய ஆசாமி போலீசார் விசாரணை
/
பைக் திருடிய ஆசாமி போலீசார் விசாரணை
ADDED : மார் 31, 2025 05:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம், : பைக் திருட்டில் ஈடுபட்ட அரியலுார் ஆசாமியை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
விருத்தாசலம், கருவேப்பிலங்குறிச்சி, ஊமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் சமீபகாலமாக மோட்டார் பைக்குகள் திருடுபோவது வாடிக்கையானது.
கடந்த சில வாரங்களுக்கு முன் தங்கதுரை என்ற கட்டுமான தொழிலாளியை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து 21 மொபட்டுகளை பறிமுதல் செய்தனர். விருத்தாசலம் போலீசார் நேற்று வாகன சோதனை நடத்திய போது, அரியலுார் மாவட்டத்தை சேர்ந்த வாலிபர் சிக்கினார்.
இவர், விருத்தாசலம் நகரில் இருந்து புல்லட், ஹீரோ மற்றும் மொபட்டுகள் திருடியதை ஒப்புக் கொண்டார்.
போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.