/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மூதாட்டியிடம் செயின் பறிப்பு போலீசார் விசாரணை
/
மூதாட்டியிடம் செயின் பறிப்பு போலீசார் விசாரணை
ADDED : ஜன 01, 2025 07:11 AM
கடலுார் : கடலுார் பஸ் நிலையத்தில் மூதாட்டியிடம் செயின் பறித்த மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
புதுச்சத்திரம் அடுத்த பூவாலை கிராமத்தை சேர்ந்தவர் பாலு மனைவி ராதா,60. இவர், கடந்த 19ம் தேதி, கடலுாரில் உள்ள தனது மகன் சுதந்திரஹாசனை பார்க்க வந்தார். மீண்டும் சொந்த ஊருக்குச் செல்வதற்காக
மாலை 4:00 மணிக்கு கடலுார் பஸ் நிலையத்தில் பூவாலை செல்லும் பஸ்சில் ஏறினார். அப்போது அவரது கழுத்தில் அணிந்திருந்த ஆறரை சவரன் செயினை மர்ம நபர் பறித்து சென்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்கு பதிந்து, மூதாட்டியிடம் நகை பறித்த நபரை தேடி வருகின்றனர்.
மூதாட்டியிடம் பறிக்கப்பட்ட செயின் மதிப்பு ரூ. 1 லட்சத்து 95 ஆயிரம் ஆகும்.

