தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ நீரில் மூழ்கி பிளம்பர் பலி போலீசார் விசாரணை

நீரில் மூழ்கி பிளம்பர் பலி போலீசார் விசாரணை

நீரில் மூழ்கி பிளம்பர் பலி போலீசார் விசாரணை


ADDED : செப் 14, 2026 08:04 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 14, 2026 08:04 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பெண்ணாடம், செப். 15–

பெண்ணாடம் அருகே மது போதையில் கல்வெர்ட் பாலத்தின் கீழ் உள்ள, நீரில் விழுந்து பிளம்பர் இறந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர். 

பெண்ணாடம் அடுத்த திருமலை அகரம் அருகே நேற்று காலை 6:00 மணியளவில் கல்வெர்ட் பாலத்தின் கீழ் 47 வயது மதிக்கத்தக்க ஒருவர் தண்ணீரில் மூழ்கி இறந்து கிடப்பதாக பெண்ணாடம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

தகவலறிந்து வந்த பெண்ணாடம் இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் பேரூராட்சி ஊழியர்கள் ் உதவியுடன் உடலை மீட்டு, விசாரித்தனர்.  இதில் நந்திமங்கலத்தைச் சேர்ந்த ராமசாமி மகன் செந்தில்குமார், 47; என்று தெரியவந்தது. கல்வெர்ட் தடுப்புக்கட்டையில் அமர்ந்து மது அருந்தி கொண்டிருந்தபோது, போதையில் தவறி கீழே விழுந்து செந்தில்குமார் இறந்திருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.

இறந்த செந்தில்குமார் பிளம்பராக உள்ளார். இவருக்கு மனைவி, 2 மகள், 1 மகன் உள்ளனர். 

புகாரின்பேரில், பெண்ணாடம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us