/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
இளம்பெண் தற்கொலை போலீசார் விசாரணை
/
இளம்பெண் தற்கொலை போலீசார் விசாரணை
ADDED : அக் 26, 2024 06:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காட்டுமன்னார்கோவில்: கலியமலையில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
காட்டுமன்னார்கோவில் அடுத்த கலியமலையைச் சேர்ந்தவர் சீனிவாசன் மகன் செல்லத்துரை, 30; சென்னையில் தனியார் கம்பெனியில் வேலை செய்கிறார். இவரும், தெற்கு விருந்தாங்கநல்லுாரைச் சேர்ந்த ஜோதிமணி மகள் சோனியா, 27, என்பவருக்கும் இரண்டு ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. குழந்தை இல்லை.
செல்லத்துரை சென்னையில் இருப்பதால், சோனியா, தாய் செல்வி வீட்டில் இருந்து வந்தார். இந்நிலையில், சோனியா நேற்று முன்தினம் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். புகாரின் பேரில் புத்துார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.