/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கடை ஊழியரை தாக்கிய மூவருக்கு போலீஸ் வலை
/
கடை ஊழியரை தாக்கிய மூவருக்கு போலீஸ் வலை
ADDED : பிப் 17, 2024 05:00 AM
புவனகிரி : புவனகிரியில் பேட்டரி கடை ஊழியரை தாக்கிய மூவரை போலீசார் தேடி வருகின்றனர்.
புவனகிரி அடுத்த பூதவராயன்பேட்டை, கிழக்கு தெருவை சேர்ந்தவர் ஆனந்தராஜ். இவர் புவனகிரியில் உள்ள பேட்டரி கடை ஒன்றில் வேலை செய்து வருகிறார். கடை உரிமையாளர் அதே பகுதியைச் சேர்ந்த திலக் என்பவருக்கும், கள்ளிக்காட்டு தெருவை சேர்ந்த ஷமல் என்பவருக்கும் முன் விரோதம் உள்ளது. இது தொடர்பாக அவர்களுக்குள் மீண்டும் பிரச்னை ஏற்பட்டது.
அப்போது திலக்கிற்கு, ஆனந்தராஜ் ஆதரவாக பேசினார். நேற்று முன்தினம் ஆனந்தராஜை ஷமல் அவரது உறவினர்கள் மகாராஜன், கலை ஆகியோர் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர்.
புகாரின் பேரில், ஷமல் உட்பட மூவர் மீது புவனகிரி போலீசார் வழக்குப் பதிந்து, தேடி வருகின்றனர்.