ADDED : ஏப் 22, 2026 08:11 PM

அ நிறம் | அளவு
குள்ளஞ்சாவடி: குள்ளஞ்சாவடியில் போலீசார், துணை ராணுவத்தினர் அணிவகுப்பு சென்றனர்.
தமிழக சட்டசபை தேர்தல் இன்று நடைபெறுகிறது. இதையொட்டி பொதுமக்கள் மத்தியில் நம்பிக்கையை உறுதி செய்யவும், அச்சமின்றி ஓட்டளிக்கவும், சட்டம் ஒழுங்கை நிலைநாட்டவும் போலீசார், துணை ராணுவம் அணிவகுப்பு சென்றனர்.
குள்ளஞ்சாவடி கிராம பகுதிகளான புலியூர், புலியூர்காட்டுசாகை, கோ.சத்திரம் ஆகிய பகுதிகளில் எஸ்.பி., ஜெயக்குமார், நெய்வேலி டி.எஸ்.பி., ராதாகிருஷ்ணன், குள்ளஞ்சாவடி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாண்டிச்செல்வி, துணை ராணுவத்தினர் மற்றும் பல்வேறு போலீசார் அணிவகுப்பில் கலந்து கொண்டனர்.
