ADDED : ஜூன் 06, 2026 04:51 AM

விருத்தாசலம்: விருத்தாசலம் போலீசார் நடந்து சென்று இரவு நேர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
தமிழகத்தின் புதிய டி.ஜி.பி.,யாக மகேஷ்குமார் அகர்வால் பொறுப்பேற்றதை தொடர்ந்து, மாநிலம் முழுவதும் பொது மக்கள், வியாபாரிகளிடம் நன்மதிப்பை பெறும் வகையில் போலீசார் இரவு நேரம் நடந்து சென்று ரோந்து மேற்கொள்ள அறிவுறுத்தினார்.
அதன்படி, விருத்தாசலம் டி.எஸ்.பி., பாலகிருஷ்ணன் தலைமையில் இன்ஸ்பெக்டர் பிரதாப் சந்திரன், சப் இன்ஸ்பெக்டர்கள் பாரதநேரு, காந்தி, சிறப்பு சப் இன்ஸ்பெக்டர்கள் செல்வகுமார், காந்தி உள்ளிட்டோர் நடந்து சென்று ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
கோ.பொன்னேரி ரவுண்டானா, பூதாமூர் பஸ் நிறுத்தங்களில் உள்ள வியாபாரிகள், பொது மக்களிடம் குறைகள் கேட்டறிந்தனர். பாதசாரிகளை பாதிக்காத வகையில் விளம்பர போர்டுகளை அப்புறப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தினர்.
மேலும், கொளஞ்சியப்பர் அரசு கல்லுாரி, அரசு மேல்நிலைப் பள்ளிகளின் முகப்புகளில் புகையிலை எதிர்ப்பு உறுதிமொழி வாசகம் அடங்கிய பேனர்கள் ஒட்டப்பட்டன.
