தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ கொத்தனார் தற்கொலை போலீஸ் விசாரணை

கொத்தனார் தற்கொலை போலீஸ் விசாரணை

கொத்தனார் தற்கொலை போலீஸ் விசாரணை


ADDED : செப் 18, 2026 04:42 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 18, 2026 04:42 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பண்ருட்டி, செப். 19–

கொத்தனார் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

பண்ருட்டி அடுத்த வளையக்காரக்குப்பத்தை சேர்ந்தவர் குமாரவேல் மகன் தணிகைவேல்,31; கொத்தனார்; இவரது மனைவி சினேகா,21; திருமணமாக மூன்றாண்டாகும் இவர்களுக்கு அஸ்வந்த் என்ற 2 வயது மகன் உள்ளார்.

இந்நிலையில் குடிப்பழக்கம் உள்ள தணிகைவேல் அடிக்கடி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டு வாசலில் படுத்து துாங்கியவர் நேற்று காலை எழுந்து பார்த்தபோது, வீட்டின் பின்னால் உள்ள மரத்தில் துாக்கில் தொங்கிக் கொண்டிருந்தார்.

உடன் அவரை மீட்டு, பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு, அவரை பரிசோதித்த டாக்டர், ஏற்கனவே இறந்துவிட்டதை உறுதி செய்தார்.

இதுகுறித்து சினேகா கொடுத்த புகாின் பேரில் பண்ருட்டி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us