ADDED : நவ 12, 2026 03:47 PM
அ நிறம் | அளவு
நெல்லிக்குப்பம்.: மாயமான பள்ளி மாணவியை போலீசார் தேடிவருகின்றனர்.
நெல்லிக்குப்பம் அடுத்த எய்தனூர் கிராமத்தை சேர்ந்தவர் கைலாசம் மகள் யாழினி,15; நெல்லிக்குப்பம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார்.
நேற்று (நவ.,11) காலை வழக்கம் போல் பள்ளிக்குச் சென்றவர் மாலை வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இதுகுறித்த புகாரின் பேரில் நெல்லிக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து, மாயமான மாணவியை தேடி வருகின்றனர்.
