தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ சட்டசபை தேர்தலுக்கு போலீஸ் பாதுகாப்பு உட்கோட்டம் வாரியாக விபரம் சேகரிப்பு

 சட்டசபை தேர்தலுக்கு போலீஸ் பாதுகாப்பு உட்கோட்டம் வாரியாக விபரம் சேகரிப்பு

 சட்டசபை தேர்தலுக்கு போலீஸ் பாதுகாப்பு உட்கோட்டம் வாரியாக விபரம் சேகரிப்பு


ADDED : பிப் 26, 2026 04:49 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 26, 2026 04:49 AM


Follow on Google
அ நிறம் | அளவு

-நமது நிருபர்-:

சட்டசபை மற்றும் லோக்சபா தேர்தல்களின் போது இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுகளை பின்பற்றி ஜனநாயக முறைப்படி அமைதியாக, பாதுகாப்பாக நடைபெறுவதை உறுதி செய்வது அந்தந்த மாநில போலீசாரின் இன்றியமையாத கடமை.

மேலும், தேர்தல் அலுவலர்கள் மற்றும் ஓட்டுச்சாவடிகளில் வாக்காளர்கள் பாதுகாப்பு, மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு, இடமாற்றம் போன்ற பணிகளும் அடங்கும். அதுபோல், மதுபானம், பரிசுப்பொருட்கள் கடத்தலும் தடுக்கப்படுகிறது.

இப்பணியில் மத்திய அரசின் துணை ராணுவமும், அந்தந்த மாநில போலீசாருடன் இணைந்து செயல்படும். குறிப்பாக பதட்டமான ஓட்டுச்சாவடிகளில் துணை ராணுவத்துடன், கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவது வழக்கம்.

அதன்படி, வரும் சட்டசபை தேர்தலை முன்னிட்டு பாதுகாப்பு பணியில் மாவட்ட போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

குறிப்பாக, விருத்தாசலம் சட்டசபை தொகுதியில், 29 ஓட்டுச்சாவடிகள் கூடுதலாக அமைக்கப்பட்டு, 317 ஓட்டுச்சாவடிகளாக மாற்றப்பட்டுள்ளன.

அதன்படி, விருத்தாசலம் உட்கோட்டத்தில் உள்ள விருத்தாசலம், மங்கலம்பேட்டை, ஆலடி, கம்மாபுரம், கருவேப்பிலங்குறிச்சி, பெண்ணாடம் போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்கு உட்பட்ட பதட்டமான ஓட்டுச்சாவடிகள் விபரம் சேகரிக்கப்படுகிறது.

அவற்றில், பழைய குற்றவாளிகள், அவர்களின் அன்றாட பணிகள், தேர்தல் நேர பிரச்னைகள், தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்த போராட்டங்கள் உட்பட பல்வேறு சட்டம் ஒழுங்கு பாதிப்புகள் குறித்து தீவிரமாக சேகரிக்கப்பட்டு வருகிறது.

மேலும், சரித்திர பதிவேடு குற்றவாளிகள் மீது, 110 பிரிவில் வழக்குப் பதிவு செய்து, ஆர்.டி.ஓ., கோர்ட்டில் ஆஜர்படுத்தி, நன்னடத்தை சான்று பெறப்படுகிறது.

லைசென்ஸ் பெற்ற துப்பாக்கிகள் உட்பட அனைத்து விபரங்களையும் சேகரித்து, எஸ்.பி., அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us