/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
இருதரப்பு மோதலில் போலீஸ் ஸ்டேஷன் முற்றுகை
/
இருதரப்பு மோதலில் போலீஸ் ஸ்டேஷன் முற்றுகை
ADDED : ஜூன் 06, 2025 08:24 AM

பண்ருட்டி; பண்ருட்டி அருகே கோஷ்டி மோதல் தகராறில் ஒரு தரப்பினர் சாலை மறியல் செய்தனர்.
கடலுார் மாவட்டம், பண்ருட்டி அடுத்த ராயர்பாளையம் ஆதிதிராவிடர் பகுதியைச் சேர்ந்தவர்கள் கிருஷ்ணமூர்த்தி, மகாலிங்கம். இருதரப்புக்கும் முன்விரோதம் உள்ளது. நேற்று காலை மீண்டும் தகராறு ஏற்பட்டு, ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர்.
இதில் காயமடைந்த மகாலிங்கம் தரப்பினர் முத்துப்பாண்டி,35; உட்பட 4 பேர் பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். புதுப்பேட்டை போலீசார், சிகிச்சையில் இருந்தவர்களை விசாரணைக்காக போலீஸ் ஸ்டேஷன் அழைத்து வந்தனர்.
ஆத்திரமடைந்த உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் 100க்கும் மேற்பட்டோர் போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டு, தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி இரவு 8:00 மணிக்கு சாலை மறியல் செய்தனர்.
இன்ஸ்பெக்டர் அசோகன் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தார். இதனையேற்று போராட்டம் கைவிடப்பட்டது.