/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
போலீஸ் நிழற்குடையில் வேன் மோதி பாதிப்பு
/
போலீஸ் நிழற்குடையில் வேன் மோதி பாதிப்பு
ADDED : ஜன 10, 2025 06:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புவனகிரி: புவனகிரி போலீஸ் நிழற்குடையில் வேன் மோதி பள்ளி மாணவி காயமடைந்தார்.
புவனகிரி முள்ளிப்பள்ளத்தை சேர்ந்த துரைமுருகன் மகள் தோஷிதா,15; புவனகிரி மகளிர் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று முன்தினம் காலை 9;00 மணியளவில், புவனகிரி பாலக்கரையில் பஸ் ஏற அங்குள்ள போலீஸ் நிழற்குடை அருகே நின்றிருந்தார். அப்போது, தரங்கம்பாடியில் இருந்து மேல்மருவத்தூர் சென்ற தனியார் வேன், போலீஸ் நிழற்குடையில் மோதியது. அப்போது அங்கு நின்றிருந்த மாணவி தோஷிகா பலத்த காயமடைந்தார். அருகில் இருந்தவர்கள் மீட்டு புவனகிரி அரசு மருத்துவமனையில் மாணவியை சேர்த்தனர். இதுகுறித்து புவனகிரி போலீசார் விசாரிக்கின்றனர்.