ADDED : டிச 07, 2024 11:50 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பண்ருட்டி:கடலுார் மாவட்டம், பண்ருட்டி அடுத்த பைத்தாம்பாடி பகுதியைச் சேர்ந்தவர் முத்துகுமார் மகன் மோகன்ராஜ், 24; போலீஸ்காரர். சென்னை, சோழிங்கநல்லுார் சைபர் கிரைம் பிரிவில் டிரைவர்.
இவர் நேற்று மாலை 4:00 மணிக்கு பைத்தாம்பாடி கிராமத்தில் இருந்து பண்ருட்டி நோக்கி 'பல்சர்' பைக்கில் சென்று கொண்டிருந்தார்.
கரும்பூர் அருகே வந்தபோது, கரும்பூரைச் சேர்ந்த பிரகாஷ், 38, என்பவர் ஓட்டி வந்த 'ஹோண்டா ஷைன்' பைக், மோகன்ராஜ் ஓட்டி வந்த பைக் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த மோகன்ராஜ் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
இதுகுறித்து புதுப்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.