/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மாணவரிடம் பணம் பறித்த போலீஸ்காரர் 'சஸ்பெண்ட்'
/
மாணவரிடம் பணம் பறித்த போலீஸ்காரர் 'சஸ்பெண்ட்'
ADDED : அக் 16, 2025 02:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: கடலுார் மாவட்டம், நெய்வேலி டவுன்ஷிப் போலீஸ் நிலைய முதல் நிலை காவலர் பூவராகவன். இவர் புகை பிடித்த கல்லுாரி மாணவர்களை, கஞ்சா வழக்கு போட்டு விடுவேன் என மிரட்டி ரூ.1.30 லட்சம் பணம் பறித்துள்ளார்.
இது தொடர்பான புகாரின் அடிப்படையில், முதல் நிலை காவலர் பூவராகவனை, கடலுார் எஸ்.பி., ஜெயக்குமார் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார். முதல் நிலை காவலர் பூவராகவன், 2023ம் ஆண்டு விருத்தாசலத்தில் குட்கா வழக்கில் சம்மந்தப்பட்டு, கைது செய்யப்பட்டவர் என்பவர் குறிப்பிடத்தக்கது.