ADDED : அக் 25, 2024 06:48 AM

விருத்தாசலம்: உலக போலியோ தினத்தையொட்டி, விருத்தாசலம் ஸ்ரீ வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி சார்பில், விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
மருத்துவர் ராஜகோபாலன் தலைமை தாங்கினார். மருத்துவர்கள் குலோத்துங்கசோழன், விஜய் ஆகியோர் முன்னிலை வகித்து, போலியோ சொட்டு மருந்து போடுவதன் நோக்கம், அவற்றால் ஏற்படும் நன்மைகள் குறித்து பேசினர்.
பள்ளி தாளாளர் விஸ்வநாதன் வரவேற்றார். நகராட்சி சேர்மன் சங்கவி முருகதாஸ் ஊர்வலத்தை துவக்கி வைத்தார். மாவட்ட சாரண - சாரணிய இயக்க செயலாளர் வீரப்பா போலியோ விழிப்புணர்வு கருத்துக்களை வழங்கினார்.
விருத்தாசலம் ரோட்டரி சங்க தலைவர் அசோக்குமார் முன்னாள் செயலாளர் பிரகாஷ்ராஜா மற்றும் சாரண - சாரணியர், இளம் செஞ்சிலுவை சங்கம், தேசிய பசுமை படை மாணவர்கள் ஆசிரியர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
விருத்தாசலம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் இருந்து துவங்கிய ஊர்வலம், கடைவீதி வழியாக பள்ளி வரை சென்றது. போலியோ விழிப்புணர்வு துண்டு பிரசுரம் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.
பள்ளி முதல்வர் சிவகாமி நன்றி கூறினார்.