ADDED : ஜூன் 29, 2026 03:56 AM

அ நிறம் | அளவு
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பத்தில் போலியோ சொட்டு மருந்து முகாமை சேர்மன் ஜெயந்தி துவக்கி வைத்தார்.
தமிழகம் முழுவதும் நேற்று போலியோ சொட்டு மருந்து முகாம் நடந்தது. நெல்லிக்குப்பம் நகராட்சியில் 24 மையங்களில் இந்த முகாம் நடந்தது.நகராட்சி மருத்துவமனையில் முகாமை சேர்மன் ஜெயந்தி குழந்தைகளுக்கு சொட்டு மருந்து கொடுத்து துவக்கி வைத்தார்.
டாக்டர் கானஸ்ரீ, துப்புரவு ஆய்வாளர் கேசவன்,துணைத்தலைவர் கிரிஜா,மருந்தாளுனர் பொற்செழியன்,செவிலியர் விஜயலட்சுமி உள்ளிட்டோர், கலந்து கொண்டனர்.
முகாமில் 800 க்கும் மேற்பட்ட 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கினர்.
இன்று முதல் செவிலியர்கள் வீடுவீடாக சென்று விடுபட்ட குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்குவார்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
