தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ நுாதன முறையில் பட்டுவாடா அரசியல் கட்சிகள் யோசனை

 நுாதன முறையில் பட்டுவாடா அரசியல் கட்சிகள் யோசனை

 நுாதன முறையில் பட்டுவாடா அரசியல் கட்சிகள் யோசனை


ADDED : மார் 28, 2026 06:23 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 28, 2026 06:23 AM


Follow on Google
அ நிறம் | அளவு

- நமது நிருபர் -: தேர்தல் ஆணையத்திற்கு தெரியாமல் வாக்காளர்களுக்கு நுாதன முறையில் பட்டுவாடா செய்வது குறித்து அரசியல் கட்சியினர் தீவிர யோசனையில் இறங்கியுள்ளனர்.

உள்ளாட்சி பதவிகள் துவங்கி, சட்டசபை, லோக்சபா என பொதுத் தேர்தல்களிலும் வாக்காளர்களின் ஓட்டுக்களை கவர மது, பிரியாணியுடன் 'வைட்டமின் - ப' வழங்குவது தொடர்கிறது.

இதுபோன்ற செலவுகளை சமாளிக்கும் வகையில், வசதிபடைத்த நபர்களையே வேட்பாளராக தேர்வு செய்யும் நடைமுறை உள்ளது.

இருப்பினும், 'என் ஓட்டு விற்பனைக்கு அல்ல, நான் பணம் வாங்கிக் கொண்டு ஓட்டுபோட மாட்டேன், ஓட்டுபோடுவது என் உரிமை, ஜனநாயக கடமை' என பல்வேறு வகைகளில் தேர்தல் ஆணையம் விழிப்புணர்வு செய்து வருகிறது.

குறிப்பாக, முதல் தலைமுறை வாக்காளர்களான மாணவர்களிடம் எடுத்துரைக்கப்படுகிறது. அதுபோல், வாக்காளர்களிடம் ஓட்டுக்கு பணம் கொடுத்தால், 'சிவிஜில்' செயலி வாயிலாக போட்டோ அல்லது வீடியோவாக பதிவு செய்து அனுப்பினால், அந்தந்த தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் வாயிலாக நடவடிக்கை எடுக்கப்படும் என சமூக வலைதளங்களிலும் பிரசாரம் தீவிரமாக நடந்து வருகிறது.

இதனால், அரசியல் கட்சிகள் சார்பில் வாக்காளர்களுக்கு பிரச்னை ஏதுமின்றி நுாதன முறையில் பட்டுவாடா செய்வது எப்படி என இளைய தலைமுறையினர் வாயிலாக தீவிர யோசனை நடந்து வருகிறது. அதில், முதல் தலைமுறை வாக்காளர்களுக்கு மொபைல் ரீசார்ஜ், டேட்டா டாப்அப், சினிமா டிக்கெட், பாஸ்ட் புட் பேக்கேஜ்;

நகர்ப்புற வாக்காளர்களுக்கு புட் டெலிவரி, கூரியர் பாய்ஸ் மற்றும் நன்கு அறிமுகமான அரசியல் கட்சிகளை சேர்ந்த இளைஞர்கள் வாயிலாகவும், கிராமப்புறங்களில் அந்தந்த கட்சிகளின் மகளிரணி மற்றும் சுயஉதவிக்குழுவினர் வாயிலாகவும் பட்டுவாடா செய்ய முடியுமா என தீவிர யோசனை செய்யப்பட்டு வருகிறது.

இதனால், பட்டுவாடாவை தடுக்க வழக்கமான சோதனை முறைகளை கடந்து, நவீன தொழில்நுட்பத்தில் தேர்தல் அலுவலர்களும் ஈடுபட வேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us