/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஓட்டுச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம்
/
ஓட்டுச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம்
ADDED : நவ 17, 2024 02:44 AM

வேப்பூர்: நல்லூர் ஒன்றிய தி.மு.க., ஓட்டுச்சாவடி முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் வேப்பூர் கூட்டுரோட்டில் நடந்தது.
கூட்டத்திற்கு, நல்லுார் தி.மு.க., ஒன்றிய செயலர் பாவாடை கோவிந்தசாமி தலைமை தாங்கினார். தி.மு.க., ஒன்றிய துணை செயலர்கள் அன்புக்குமரன், மாரிமுத்தாள் குணா, அண்ணாதுரை, முன்னாள் எம்.எல்.ஏ., கலைச்செல்வன் முன்னிலை வகித்தனர்.
தி.மு.க., இளைஞரணி ஒன்றிய துணை அமைப்பாளர் பாபு வரவேற்றார்.
விருத்தாசலம் சட்டசபை தொகுதி பொறுப்பாளர் சந்திரசேகர் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார்.
மாவட்ட கவுன்சிலர் சக்திவினாயகம், தி.மு.க., ஒன்றிய பொருளாளர் வெங்கடாசலம், தி.மு.க., நிர்வாகிகள் கருப்பையா, ரகுநாதன், முத்துக்குமரன், செந்தில்குமார், மாரிமுத்து, அண்ணாதுரை, சேகர், தனசேகர், குணா, அரிசன் உட்பட பலர் பங்கேற்றனர்.
இதில், வரும் சட்டசபை தேர்தலில் தி.மு.க., ஓட்டுச்சாவடி முகவர்களின் செயல்பாடுகள், கடந்த தேர்தலில் ஓட்டு குறைந்த பகுதிகளில் காரணம் கேட்டு ஆலோசனைக் கூட்டம் நடந்தது.