/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஓட்டுச்சாவடி முகவர்கள் ஆலோசனைக் கூட்டம்
/
ஓட்டுச்சாவடி முகவர்கள் ஆலோசனைக் கூட்டம்
ADDED : நவ 19, 2024 07:07 AM

ராமநத்தம்; மங்களூர் தி.மு.க., தெற்கு ஒன்றிய ஓட்டுச்சாவடி முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் வள்ளிமதுரத்தில் நடந்தது.
கூட்டத்திற்கு, மங்களூர் தி.மு.க., தெற்கு ஒன்றிய செயலர் செங்குட்டுவன் தலைமை தாங்கினார். ஒன்றிய அவைத் தலைவர் சேகர், மாவட்ட பிரதிநிதி குமணன் முன்னிலை வகித்தனர். திட்டக்குடி சட்டசபை தொகுதி பொறுப்பாளர் ரமேஷ் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசினார்.
தி.மு.க., நிர்வாகிகள் திருவள்ளுவன், ராமச்சந்திரன், கேசவன், தனபால், ஜெயந்தி, வேல்முருகன் உட்பட பலர் பங்கேற்றனர்.
இதில், வரும் சட்டசபை தேர்தலில் தொகுதி முழுவதும் ஓட்டுகளை சேகரிப்பது, கடந்த தேர்தலில் ஓட்டுகள் குறைந்த பகுதிகளில் விசாரித்து ஆலோசனை வழங்கப்பட்டது.

