ADDED : மார் 21, 2026 09:49 PM

அ நிறம் | அளவு
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் சட்டசபை தேர்தலுக்கான ஓட்டு சாவடி மையம் அமைய உள்ளது.
இதனை நேற்று தேர்தல் நடத்தும் அலுவலர் செந்தில்குமார் ஆய்வு செய்தார். அப்போது கூடுதலாக மின் விளக்குகள் அமைக்க வேண்டும்; கழிவறை, குடிநீர் வசதி செய்ய வேண்டும். மாற்று திறனாளி வாக்காளர்களுக்கு தேவையான வசதிகளை முறையாக செய்ய வேண்டும்; என அறிவுறுத்தினார்.
முதல் தலைமுறை வாக்காளர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டைகளை வழங்கினார்.அனைவரும் தவறாமல் ஓட்டளிக்க வலியுறுத்தினார். மண்டல இயக்குனர் லட்சுமி,தொகுதி தேர்தல் அலுவலர் கமலம்,நகராட்சி கமிஷ்னர் கிருஷ்ணராஜன் உடனிருந்தனர்.
