/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
உறவுப்பாலத்தில் இன்று நீரிழிவு நோய்கள் விளக்கம்
/
உறவுப்பாலத்தில் இன்று நீரிழிவு நோய்கள் விளக்கம்
ADDED : ஆக 09, 2011 02:54 AM
புதுச்சேரி : வானொலியில் ஒலிபரப்பாகும் உறவுப்பாலம் நிகழ்ச்சியில் நீரிழிவு நோய் குறித்து விளக்கம் அளிக்கப்படுகிறது.
அகில இந்திய வானொலி நிலைய நிகழ்ச்சி தயாரிப்பாளர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:புதுச்சேரி வானொலியில் இன்று (9ம் தேதி) இரவு 8 மணிக்கு ஒலிபரப்பாகும் உறவுப்பாலம் நிகழ்ச்சியில் நீரிழிவு நோய் வகைகள், நோய் எவ்வாறு வருகிறது, நோய் வராமல் தடுப்பது எப்படி என்பது குறித்தும், இந்நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கடைபிடிக்க வேண்டிய உணவு பழக்கவழக்கங்கள், நடைமுறை வாழ்வில் செய்ய வேண்டிய மாற்றங்கள், சிகிச்சை முறைகள் மற்றும் இந்நோய் யாருக்கு வரும் என்பது குறித்தும் விளக்கமளிக்கப்படுகிறது.நேயர்களின் கேள்விகளுக்கு நீரிழிவு நோய் நிபுணர் டாக்டர் கோபிநாத் விளக்கமளிக்கிறார். நிகழ்ச்சியில் கலந்து கொள்ள 0413- 2275230, 2275240 என்ற டெலிபோன் எண்களில் தொடர்பு கொள்ளவும்.இவ்வாறு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

