/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சில்வர் பீச்சில் காணும் பொங்கல் கொண்டாட்டம்
/
சில்வர் பீச்சில் காணும் பொங்கல் கொண்டாட்டம்
ADDED : ஜன 17, 2025 06:23 AM

கடலுார்: காணும்பொங்கலையொட்டி கடலுார் சில்வர் பீச்சில் பொதுமக்கள் குடும்பத்தினருடன் கொண்டாடினர்.
பொங்கல் பண்டிகையை தொடர்ந்து காணும் பொங்கல் விழா கொண்டாடப்படுகிறது. காணும் பொங்கல் என்பது ஒற்றுமையை, அன்பை பெருக செய்வதற்கான பண்டிகையாகவும், உறவை பலப்படுத்துவதற்கான பண்டிகையாகவும் கொண்டாடப்படுகிறது. உறவினர்கள். நண்பர்களை சந்தித்து வாழ்த்துக்களையும், பரிசுகளையும் வழங்கி உறவை பலப்படுத்திக் கொள்வர்.
இதன் ஒரு நிகழ்வாக பொதுமக்கள் ஆறு, கோவில், பீச் என பொது மக்கள் அதிகம் கூடும் இடத்தில் ஒன்று கூடி பல்வேறு விளையாட்டுகளை விளையாடி மகிழ்வது வழக்கம்.
இதன்படி கடலுார் மற்றும் சுற்று வட்டாரத்தில் உள்ள பொதுமக்கள் சில்வர் பீச்சில் குடும்பத்தினருடன் நேற்று குவிந்தனர்.
அதனால் சில்வர் பீச்சில் கூட்டம் நிரம்பி வழிந்தது.