/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஒயாசிஸ் நிறுவனத்தில் பொங்கல் விழா
/
ஒயாசிஸ் நிறுவனத்தில் பொங்கல் விழா
ADDED : ஜன 18, 2024 04:32 AM
கடலுார்: கடலுார் ஒயாசிஸ் தொண்டு நிறுவனத்தில், மாற்றுத்திறனாளிகளின் சிறப்பு பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
விழாவிற்கு, கலெக்டர் அருண்தம்புராஜ் துவக்கி வைத்தார். ஒயாசிஸ் நிறுவன தலைவர் எப்சிபா தவராஜ் வரவேற்றார். மாணவர்களின் கலை நிகழ்ச்சி, உறியடித்தல், கயிறு இழுத்தல் உள்ளிட்ட விளையாட்டு போட்டிகள் நடந்தது. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
டி.ஆர்.ஓ., ராஜசேகர், மனநல மருத்துவர் சத்தியமூர்த்தி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பாபு, மாநகராட்சி 19வது வார்டு கவுன்சிலர் செந்தில்குமாரி இளந்திரையன், வார்டு செயலாளர் இளந்திரையன், ஐ.இ.பி.சி., தொண்டு நிறுவனம் முருகானந்தம், ஒயாசிஸ் நிறுவன துணைத் தலைவர் புளோரா தவராஜ், நிர்வாக இயக்குனர் லெனின் பிரபாகர் பங்கேற்றனர்.
சிறப்பு ஆசிரியை ஜெயஸ்ரீ நன்றி கூறினார்.