ADDED : ஜன 10, 2025 11:26 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: கடலுார் சுப்ராயலு நகரில் இயங்கும் மனவளர்ச்சி குன்றியோருக்கான குளோபல் சிறப்பு பள்ளியில் பொங்கல் விழா நடந்தது.
நிறுவன தலைவர் குமுதம் முன்னிலை வகித்தார். நிர்வாக இயக்குனர் கோபால் வரவேற்றார். சிறப்பு விருந்தினர்களாக மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் பாபு, தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் மாநில திட்ட மேலாளர் அரவிந்தன், மாவட்ட இளம்சிறார் நீதி குழும உறுப்பினர் துர்கா, முடநீக்கு வல்லுனர் சுந்தரவடிவேல் பங்கேற்றனர்.
மனவளர்ச்சி குன்றிய சிறப்பு குழந்தைகள், பெற்றோர்கள் மற்றும் சிறப்பாசிரியர்கள் ஆகியோருக்கு விளையாட்டு போட்டிகள் நடத்தி வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

