ADDED : ஜன 10, 2025 11:23 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிதம்பரம்: சிதம்பரம் வீனஸ் மெட்ரிக் பள்ளியில் பொங்கல் விழா நடந்தது.
வீனஸ் குழுமப் பள்ளிகளின் தாளாளர் குமார் தலைமை தாங்கி விழாவை துவக்கி வைத்தார்.
பள்ளி துணை தாளாளர் ரூபியால் ராணி, முதல்வர் நரேந்திரன், நிர்வாக அலுவலர் கிரேஸ் போனிகலா முன்னிலை வகித்தனர்.
தொடர்ந்து பொங்கல் வைத்து வழிபாடு நடந்தது மாணவர்களின் கண் கவர் கலை நிகழ்ச்சிகள், சிலம்பம், உரி அடித்தல் போட்டி, கோலப் போட்டி ஆகியன நடைப்பெற்றது.ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு பொங்கல் வாழ்த்து கூறி இனிப்பு வழங்கப்பட்டது.

