ADDED : ஜன 16, 2025 04:25 AM

மங்கலம்பேட்டை பேரூராட்சி
பேரூராட்சி செயல் அலுவலர் மயில்வாகனன் முன்னிலை வகித்தார். சேர்மன் சம்சாத் பாரி இப்ராஹிம் தலைமை தாங்கி, துவக்கி வைத்தார். அலுவலக வளாகத்தில் பொங்கல் வைத்து, ஊழியர்கள், பொது மக்களுக்கு வழங்கப்பட்டது. துாய்மை பணியாளர்களுக்கு சீருடைகளை சேர்மன் வழங்கினார். கவுன்சிலர்கள் நுாருல்லா, கிருஷ்ணவேணி, மகாலட்சுமி பங்கேற்றனர்.
ஓயாசிஸ் நிறுவனம்
கடலுார் ஒயாசிஸ் தொண்டு நிறுவனத்தில் நடந்த விழாவிற்கு டி.ஆர்.ஓ., ராஜசேகரன் தலைமை தாங்கினார். ஒயாசிஸ் நிர்வாக இயக்குனர் லெனின் பிரபாகர் வரவேற்றார். சிறப்பு விருந்தினர்களாக மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் பாபு, மனநல மருத்துவர் சத்தியமூர்த்தி, கவுன்சிலர் செந்தில்குமாரி இளந்திரையன், ஒயாசிஸ் நிறுவன துணைத் தலைவர் ப்ளோரா தவராஜ் பங்கேற்றனர். ஒயாசிஸ் நிறுவனத் தலைவர் எப்சிபா நன்றி கூறினார்.
கிருஷ்ணசாமி கல்லுாரி:
கிருஷ்ணசாமி பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லுாரியில் நடந்த விழாவிற்கு கல்லுாரி தாளாளர் டாக்டர் ராஜேந்திரன் தலைமை தாங்கியும், கல்லுாரி செயலாளர் விஜயகுமார் முன்னிலை வகித்தும் பொங்கல் விழா பற்றி சிறப்புரையாற்றினர். கல்லுாரி முதல்வர் இளங்கோ, துணை முதல்வர் ரகு, நிர்வாக அலுவலர் பாலகிருஷ்ணன் வாழ்த்துரை வழங்கினர். மாணவிகளுக்கு கோலப்போட்டி நடத்தி பரி சு வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை துறைத்தலைவர் விஜயலட்சுமி, உதவி பேராசிரியர் ரமேஷ் செய்திருந்தனர்.
குமராட்சி
குமராட்சி ஊராட்சி அலுவலகத்தில் நடந்த விழாவில், முன்னாள் ஊராட்சி தலைவர் தமிழ்வாணன் பணியாளர்களுக்கு நினைவு பரிசு வழங்கினார். முன்னாள் வார்டு உறுப்பினர்கள், ஊராட்சி பணியாளர்கள் பொதுமக்கள் பங்கேற்றனர்.
செம்மேடுபு மழலையர் பள்ளி
பண்ருட்டி அடுத்த செம்மேடு பால போத பவனம் மழலையர் பள்ளியில் பொங்கல் விழா நடந்தது. பள்ளி நிர்வாகி சந்தானம் தலைமை தாங்கினார். ஆலோசகர் நரசிம்மன் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக ஓய்வு பெற்ற சி.இ.ஓ., விஜயராகவன் பங்கேற்றார். பள்ளி முதல்வர் தேவி நன்றி கூறினார்.
வன்னியர்பாளையம்
வன்னியர்பாளையத்தில் முதியோர்களுடன் பொங்கல் நடந்த பொங்கல் விழாவிற்கு கடலுார் கல்வி கழக மேலாண்மை அறங்காவலர் மூத்த வழக்கறிஞர் அருணாச்சலம் தலைமை தாங்கினார். எல்டர்ஸ் பார் எல்டர்ஸ் பவுண்டேஷன் இயக்குனர் இளங்கோ, ராஜரத்தினம் வரவேற்றார். வி ஸ்கொயர் மால் உரிமையாளர் அனிதா ரமேஷ் சிறப்புரையாற்றினார். ரோட்டரி கிளப் ஆப் சங்கமம் தலைவர் நாராயணசாமி, ரவிச்சந்திரன், குழந்தைகள் நலக்குழு உறுப்பினர் இளங்கோவன், ராஜலட்சமி பங்கேற்றனர்.
வேப்பூர்
கண்டப்பங்குறிச்சி ஶ்ரீ பவானி கல்வி நிறுவனங்கள் சார்பில் நடந்த பொங்கல் விழாவிற்கு நிறுவனங்கள் தலைவர் நாராயணன் தலைமை தாங்கினார். கல்வி நிறுவனங்களின் செயலர் மகாலட்சுமி நாராயணன் முன்னிலை வகித்தார். நிர்வாக இயக்குனர் சடையமுத்து வரவேற்றார். கல்லூரி முதல்வர்கள் பாலகிருஷ்ணன், நல்லமுத்து, பாலமுருகன், செந்தில், பள்ளி முதல்வர் ஜெசுவந்தி, மாணவர்கள், பெற்றோர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
நல்லுார்
ஶ்ரீ பாலாஜி மேல்நிலைப் பள்ளியில் நடந்த விழாவிற்கு பள்ளி தாளாளர் அன்புக்குமரன் தலைமை தாங்கினார். விருத்தாசலம் ரோட்டரி கிளப் தலைவர் அசோக்குமார் முன்னிலை வகித்தார். ரோட்டரி கிளப் நிர்வாகிகள் அம்ருதீன், தனுஷ்கோடி, லட்சுமணன், பிரகாஷ் ராஜா உட்பட பலர் பங்கேற்றனர்.
ஸ்ரீமுஷ்ணம்
பேரூராட்சியில் நடந்த விழாவிற்கு பேரூராட்சி சேர்மன் செல்விஆனந்தன் தலைமை தாங்கினார். செயல் அலுவலர் யசோதா முன்னிலை வகித்தார். விளையாட்டு போட்டிகள் நடத்தி பரிசு வழங்கப்பட்டது.

