ADDED : ஜன 15, 2024 06:37 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பரங்கிப்பேட்டை : பரங்கிப்பேட்டை பேரூராட்சியில், சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
சேர்மன் தேன்மொழி சங்கர் துவக்கி வைத்தார். துணை சேர்மன் முகமது யூனுஸ், பேரூராட்சி செயல் அலுவலர் திருமூர்த்தி, முன்னாள் துணை சேர்மன் செழியன், கவுன்சிலர் ஆனந்தன் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட பிரதிநிதி சங்கர், கவுன்சிலர்கள் கணேசமூர்த்தி, சரவணன், ஜாபர் ஷரீப், கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர் செல்வகுமார், துப்புரவு மேற்பார்வையாளர்கள் வீர ஆனந்தம், சுதாகர், அலி அப்பாஸ் உட்பட பலர் பங்கேற்றனர்.
துப்புரவு ஆய்வாளர் ஜோதி நன்றி கூறினார்.