ADDED : ஜன 15, 2024 06:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிதம்பரம் : சிதம்பரம் மாலை கட்டி தெரு, நகராட்சி நடுநிலைப் பள்ளியில் 'சமத்துவப் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
பள்ளி வளாகத்தில் நடந்த சமுத்துவ பொங்கல் விழா வட்டாரக் கல்வி அலுவலர்கள் நடராஜன், குமார் முன்னிலையில் நடந்தது.
வட்டார வள மைய மேற்பார்வையாளர் இளவரசன், ஆசிரியர் பயிற்றுநர்கள் பாஸ்கரன், பூங்குழலி பங்கேற்றனர்.
ஏற்பாடுகளை ஆசிரியர்கள் அகிலா, ஜெயந்தி, புனிதா, லதா, வேல்முருகன், அன்பரசி, ஆனந்தி, கலைஞானி, அன்னபூரணி, தீபா, தீபலட்சமி, தில்லைரங்கம் செய்திருந்தனர்.
மாணவ, மாணவிகளுக்கு சிலம்பம், உரியடி உள்ளிட்ட கலைநிகழ்ச்சி நடத்தப்பட்டது. ஜெயந்தி நன்றி கூறினார்.