/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
திருமுதுகுன்றம் பாவேந்தர் பேரவை பொங்கல் விழா
/
திருமுதுகுன்றம் பாவேந்தர் பேரவை பொங்கல் விழா
ADDED : ஜன 20, 2025 06:31 AM

விருத்தாசலம் : திருமுதுகுன்றம் பாவேந்தர் பேரவை சார்பில் பொங்கல் விழா நடத்தப்பட்டது.
விருத்தாசலத்தில் தமிழர் திருநாளை முன்னிட்டு திருமுதுகுன்றம் பாவேந்தர் பேரவை சார்பில் பொங்கல் விழா நேற்று கொண்டாடப் பட்டது. மூத்த வழக்கறிஞர் பூமாலை குமாரசாமி தலைமை தாங்கினார்.
மூத்த வழக்கறிஞர்கள் சந்திரசேகர், விஜயகுமார், வழக்கறிஞர்கள் குமரகுரு, ரவிச்சந்திரன், அரிமா ஞானமூர்த்தி, கவுன்சிலர் சேகர் முன்னிலை வகித்தனர். அமைப்பாளர் ஓவியர் ராஜ்மோகன் வரவேற்றார்.
தி.மு.க., நிர்வாகி பாலகிருஷ்ணன், கதிர்காமன், ஆசிரியர் பூவராகன், சின்ன பொண்ணு, கிருபா, பேச்சாளர் முத்தரசி அஸ்வினி, ஆசிரியர் தமிழ்ச்செல்வன், ஓவியர்கள் முருகன், சுரேஷ், தலைமை ஆசிரியர் டேவிட் லாசர் வாழ்த்தி பேசினர்.
அதில், தமிழர் திருநாள் குறித்த பல்வேறு தலைப்புகளில் நடந்த பேச்சு, கட்டுரை, ஓவிய போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கப்பட்டன.
கவுன்சிலர் கருணா நன்றி கூறினார்.