/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வி.சி., கட்சி சார்பில் பொங்கல் விழா
/
வி.சி., கட்சி சார்பில் பொங்கல் விழா
ADDED : ஜன 13, 2025 05:19 AM
சிதம்பரம் : வி.சி., கட்சி சார்பில் பொங்கல் விழா நடந்தது.
சிதம்பரத்தில், கொத்தங்குடி தெருவில்அமைந் துள்ள பெரியபாளையத்தம்மன் கோவில் வாளாகத்தில், வி.சி., கட்சி சார்பில், பொங்கல் விழா நடந்தது.
மாவட்ட செயலாளர் தமிழ்ஒளி தலைமை தாங்கினார். இஸ்லாமிய ஜனநாயக பேரவை மாநில செயலாளர் அப்துல் ரஹ்மான், மா.கம்யூ., மாநில நிர்வாகி ரமேஷ்பாபு, சிதம்பரம் லோக்சபா தொகுதி செயலாளர் செல்லப்பன், சிதம்பரம் நகர செயலாளர் ஆதிமூலம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். 10க்கும் மேற்பட்ட பெண்கள் பொங்கல் இட்டு வழிபாடு செய்தனர்.
நிர்வாகிகள் நீதி வளவன், குறிஞ்சி வளவன், பொறியாளர் சிவகுமார், சந்தனகுமார், கமல் ராஜ், சரத்பாபு இமயவர்மன், மகளிர் அணி நிர்வாகிகள் நாகராணி, அனிதா மற்றும் பலர் பங்கேற்றனர்.