/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பொங்கல் பண்டிகை பாதுகாப்பு ஏற்பாடு தீவிரம்! 2,000 போலீசாருக்கு சுழற்சி முறையில் பணி
/
பொங்கல் பண்டிகை பாதுகாப்பு ஏற்பாடு தீவிரம்! 2,000 போலீசாருக்கு சுழற்சி முறையில் பணி
பொங்கல் பண்டிகை பாதுகாப்பு ஏற்பாடு தீவிரம்! 2,000 போலீசாருக்கு சுழற்சி முறையில் பணி
பொங்கல் பண்டிகை பாதுகாப்பு ஏற்பாடு தீவிரம்! 2,000 போலீசாருக்கு சுழற்சி முறையில் பணி
ADDED : ஜன 15, 2024 06:27 AM
கடலுார்: கடலுார் மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு முன்னெச்சரிக்கைநடவடிக்கையாக 2,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை இன்று (15ம் தேதி) கொண்டாடப்படுகிறது. போகி பண்டிகை நேற்று கொண்டாடப்பட்டது. நாளை 16ம் தேதி மாட்டு பொங்கல், 17ம் தேதி காணும் பொங்கல் நடக்கிறது.
கடலுார், சிதம்பரம், பண்ருட்டி, நெய்வேலி, விருத்தாசலம், திட்டக்குடி, சேத்தியாத்தோப்பு, காட்டுமன்னார்கோவில் என மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பொங்கல் பண்டிகைக்கு தேவையான கரும்பு, மஞ்சள் கொத்து, மண் பானைகள், பூக்கள், வாழைப் பழங்கள் உள்ளிட்ட பூஜைப் பொருட்கள் வாங்க உழவர் சந்தைகள், மார்க்கெட் பகுதிகளில் காலை முதல் மக்கள் குவிந்தனர்.
இதனால், ஆங்காங்கே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போக்குவரத்து போலீசார், போக்குவரத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். பூஜைப் பொருட்கள் விற்பனை களை கட்டியது.
மாடுகளை அலங்கரிக்கும் அலங்காரப் பொருட்களையும் பொதுமக்கள் வாங்கிச் சென்றனர்.
பொங்கல் பண்டிகையை கொண்ட சொந்த ஊர்களுக்கு மக்கள் படையெடுத்துள்ளதால் பஸ் நிலையங்கள், ரயில் நிலையங்களில் கூட்டம் அலைமோதியது.
பொங்கல் பண்டிகையில் குற்ற சம்பவங்களை தடுக்கும் பொருட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்டம் முழுதும் காவல் துறை சார்பில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் கடலுார், சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி, சேத்தியாத்தோப்பு, பண்ருட்டி, திட்டக்குடி என 7 காவல் உட்கோட்டங்கள் உள்ளது.
எஸ்.பி., ராஜாராம் மேற்பார்வையில், 2 ஏ.டி.எஸ்.பி.,க்கள், 7 உட்கோட்ட டி.எஸ்.பி.,க்கள், இன்ஸ்பெக்டர்கள், சப் இன்ஸ்பெக்டர்கள், சிறப்பு சப் இன்ஸ்பெக்டர்கள், ஆயுதப்படை காவலர்கள், தமிழ்நாடு சிறப்பு காவல் படை, ஊர்க்காவல் படை வீரர்கள் என, 2000 பேர் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
புதுச்சேரி மாநிலத்தில் இருந்து மதுபானங்கள் கடத்தி வருவதை தடுக்கும் பொருட்டு, மாவட்ட எல்லைகளில் 8 நிரந்தர மதுவிலக்கு சோதனை சாவடிகளில் தீவிர வாகன சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
இதுதவிர மாவட்டம் முழுதும் 82 தற்காலிக சோதனை சாவடிகள் அமைத்தும் வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
மக்கள் அதிகளவில் கூடும் இடங்களான கடை வீதிகள், கோவில்கள், சுற்றுலா தளங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
நெடுஞ்சாலை ரோந்து வாகனங்கள் மூலமாகவும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.