ADDED : ஜன 11, 2026 06:48 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் பகுதியில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை சேர்மன் ஜெயந்தி துவக்கி வைத்தார்.
தமிழகம் முழுவதும் அரிசி வாங்கும் ரேஷன் அட்டை வைத்துள்ள குடும்பத்தினருக்கு பொங்கல் பரிசாக ரொக்கம் 3 ஆயிரம், அரிசி, சர்க்கரை, கரும்பு வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
நெல்லிக்குப்பம் திருக்கண்டேஸ்டரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் இத்திட்டத்தை சேர்மன் ஜெயந்தி துவக்கி வைத்தார்.
துணைத்தலைவர் கிரிஜா,வங்கி செயலாளர் வேல்முருகன், தி.மு.க.நகர செயலாளர் மணிவண்ணன், இளைஞரணி ராஜா, மாவட்ட பிரதிநிதிகள் வேலு, கதிரேசன், பொருளாளர் ஜெயசீலன், வி.சி.நகர செயலாளர் திருமாறன் உடனிருந்தனர்.

