ADDED : ஜன 17, 2025 06:17 AM

கடலுார்: காணும் பொங்கலையொட்டி சுற்றுலா தலங்கள் மற்றும் பூங்காக்களில் மக்கள் குவிந்ததால், கடலுாரில் முக்கிய சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது.
தமிழகத்தில் நேற்று காணும் பொங்கல் கொண்டாடப்பட்டது. இந்த நாளில் உறவினர், நண்பர்களைக் காணுதல் மற்றும் பெரியோர்களிடம் ஆசி பெறுவர். பல்வேறு விளையாட்டுப் போட்டிகள், பட்டிமன்றம், உறி அடித்தல், வழுக்கு மரம் ஏறுதல் போன்ற வீர சாகசப் போட்டிகளும் காணும் பொங்கலன்று நடக்கும்.
மேலும், தைப் பொங்கல் மற்றும் மாட்டு பொங்கலன்று வீடுகளில் பொங்கல் வைத்து வழிபாடு செய்வர். காணும் பொங்கலன்று தங்கள் பகுதியில் உள்ள கோவில்கள், சுற்றுலா தலங்கள், பூங்காக்கள், பீச் ஆகியவற்றிற்கு பொதுமக்கள் குடும்பத்துடன் சென்று பொழுதுபோக்குவர். அதன்படி, காணும் பொங்கலான நேற்று, கடலுார் மாநகர மக்கள் தங்கள் பகுதி கோவில்கள், சுற்றுலா தலங்கள், பூங்காக்களுக்கு சென்றனர்.
இதனால், கடலுார் மாநகராட்சியில் எப்போதும் பரபரப்பாக காணப்படும் லாரன்ஸ் சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது.