/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பொங்கல் விளையாட்டு விழா கவுன்சிலர் பரிசு வழங்கல்
/
பொங்கல் விளையாட்டு விழா கவுன்சிலர் பரிசு வழங்கல்
ADDED : ஜன 18, 2025 02:15 AM

கடலுார்: கடலுார் மஞ்சக்குப்பம், திரவுபதியம்மன் கோவில் தெருவில் நடந்த பொங்கல் விளையாட்டு விழாவில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
கடலுார் மஞ்சக்குப்பம், திரவுபதியம்மன் கோவில் தெருவில் பொங்கல் பண்டிகையையொட்டி விளையாட்டுப் போட்டிகள் நடந்தது. விழாவில் கோலம், ஓட்டப்பந்தயம், கயிறுஇழுத்தல், பாட்டுப்போட்டி, நடனப்போட்டி
உட்பட ஏராளமான போட்டிகள் நடந்தது. போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது.
விழாவில் மாநகராட்சி கவுன்சிலர் பிரகாஷ், சிறப்பு விருந்தினராக பங்கேற்று வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுவழங்கி பாராட்டினார். விழாவில் வார்டு நிர்வாகிகள் ராமலிங்கம், செல்வராஜ், ரமேஷ், சம்மந்தம், முருகன், பாஸ்கர், அஷ்ரப்அலி, மணிவண்ணன், மணிகண்டன், வசந்த் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர்
பங்கேற்றனர். விழா ஏற்பாடுகளை திரவுபதியம்மன் கோவில் தெரு இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.