/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தரமில்லாத சாலை பணி அரசு நிதி வீணாகும் அவலம்
/
தரமில்லாத சாலை பணி அரசு நிதி வீணாகும் அவலம்
ADDED : ஜூலை 21, 2025 06:43 AM

நெல்லிக்குப்பம், : நெல்லிக்குப்பத்தில் அமைக்கப்படும் சாலைகள் தரமில்லாமல் இருப்பதால் அரசின் நிதி வீணாகிறது.
நெல்லிக்குப்பம் நகராட்சிக்குட்பட்ட வான்பாக்கம், விஸ்வநாதபுரம், முள்ளிகிராம்பட்டு கிராமங்கள் நகர பகுதியில் இருந்து 3 கி.மீ., துாரத்தில் உள்ளது. இந்த மூன்று பகுதிகளிலும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் தார் சாலை போடப்பட்டது.
இந்நிலையில், தற்போது வான்பாக்கத்தில் இருந்து விஸ்வநாதபுரம் வரை புதிய தார் சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இங்கு, பல இடங்களில் பழைய சாலை அப்படியே தெரியும் அளவுக்கு தரமில்லாமல் பணி நடக்கிறது.
நகராட்சியில் இன்ஜினியர் பணியிடம் காலியாக இருப்பதால் சாலை பணிகளை முறையாக கண்காணிக்க அதிகாரிகள் இல்லை. இதனால், சாலை வீணாவதுடன் அரசின் நிதி வீணாகிறது. எனவே, சாலைப் பணியை தரமாக மேற்கொள்ள அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.