ADDED : ஏப் 13, 2026 07:08 PM

கடலுார்: கடலுார் தொகுதியில் அத்தியாவசிய சேவைகளில் பணிபுரிவோருக்கான தபால் ஓட்டுப்பதிவு துவங்கியது.
கடலுார் மாவட்டத்தில் உள்ள 9 சட்டசபை தொகுதிகளில் அத்தியாவசிய சேவைகளில் பணிபுரியும் தெற்கு ரயில்வே துறை, வானொலி, கடல்சார் துறை, விமான நிலைய ஆணையம், தொலைதொடர்பு துறை, ஊடகவியலாளர்கள், சென்னை மெட்ரோ, அரசு போக்குவரத்து கழகம், மின் வாரியம், தீயணைப்பு துறை, சிறைத்துறை மற்றும் போக்குவரத்து காவலர்கள் ஆகியோர் தபால் ஓட்டுப்பதிவு செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, 750 பேர் தபால் ஓட்டளிக்க விண்ணப்பம் வழங்கினர். இவர்களுக்கு நேற்று, அந்த சட்டசபை தொதிக்குட்பட்ட தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் அலுவலகங்களில் ஓட்டுப்பதிவு நடந்தது. கடலுார் தொகுதியில் 105 பேர் தபால் ஓட்டளிக்க விருப்பம் தெரிவித்தனர். இவர்களுக்கான தபால் ஓட்டுப்பதிவு கடலுார் தாலுகா அலுவலகத்தில் துவங்கியது. இதனை மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரி சிபி ஆதித்யா செந்தில்குமார் ஆய்வு செய்தார். தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரி சுந்தரராஜன் உடனிருந்தார். தபால் ஓட்டுப்பதிவு நாளை 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் நடக்கிறது.
