தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ தபால் ஓட்டுப்பதிவு பணிகள் தீவிரம்

 தபால் ஓட்டுப்பதிவு பணிகள் தீவிரம்

 தபால் ஓட்டுப்பதிவு பணிகள் தீவிரம்


ADDED : மார் 31, 2026 11:18 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 31, 2026 11:18 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கடலுார்: கடலுார் மாவட்டத்தில் 9 சட்டசபை தொகுதிகள் உள்ளன. மாவட்டம் முழுவதும் 2,590 ஓட்டுச்சாவடி மையங்களில் 12,432 ஓட்டுச்சாவடி அலுவலர்கள் ஏப்., 23ம் தேதி தேர்தல் பணியில் ஈடுபட உள்ளனர். இவர்களுக்கு தேர்தல் பணி தொடர்பான முதற்கட்ட பயிற்சி வகுப்பு அந்தந்த பயிற்சி மையங்களில் நடந்தது.

கடலுார் தொகுதிக்கான பயிற்சியில் பங்கேற்ற ஓட்டுச்சாவடி அலுவலர்களில் தபால் ஓட்டுப்பதிவு செலுத்த விருப்பம் தெரிவித்தவர்களிடம் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, ஓட்டுச்சாவடி அலுவலர்கள் பூர்த்தி செய்து வழங்கிய விண்ணப்பங்கள் கடலுார் தாலுகா அலுவலகத்தில் தொகுதி வாரியாக பிரித்து வைக்கப்பட்டு அனுப்பும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us