/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் அஞ்சல் வழி பட்டய பயிற்சி
/
கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் அஞ்சல் வழி பட்டய பயிற்சி
கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் அஞ்சல் வழி பட்டய பயிற்சி
கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் அஞ்சல் வழி பட்டய பயிற்சி
ADDED : ஏப் 11, 2025 05:56 AM
கடலுார்: கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் அஞ்சல்வழி கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சியில் சேர விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது.
கடலுார் கூட்டுறவு இணைப்பதிவாளர் செய்திக்குறிப்பு:
டாக்டர் எம்.ஜி.ஆர்., கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் 2024-25ம் ஆண்டு 24வது அஞ்சல்வழி கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சியில் சேர்வதற்கான விண்ணப்பம் (கூட்டுறவு நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு மட்டும்) வரவேற்கப்படுகிறது.இதற்கு, 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்று பிளஸ் 2 வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். வரும் 1ம் தேதி குறைந்தபட்சம் 17 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும். அதிக பட்ச வயது வரம்பு இல்லை.
இப்பயிற்சிக்கு வரும் 16ம் தேதி முதல் வரும் மே 6ம் தேதி மாலை 5:30 மணி வரை www.tncw.tn.gov.in என்ற இணையதளம் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். அதற்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. பயிற்சிக்கான கூடுதல் விவரங்கள், வழிகாட்டு நெறிமுறைகள் இணையத்தளம் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் பூர்த்தி செய்து அதற்கான சான்றிதழ் மற்றும் புகைப்படம் பதிவேற்றம் செய்ய வேண்டும். விண்ணப்ப கட்டணம் 100 ரூபாய் இணையவழியில் மட்டுமே செலுத்த வேண்டும். இணையவழி மூலம் அனுப்பப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.
இணைய வழியாக இல்லாமல் நேரடியாகவோ அல்லது தபால் மூலமோ மற்றும் கூட்டுறவு மேலாண்மை நிலையங்களுக்கு விண்ணப்பத்திருந்தால் அவ்வாறு பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
மேலும், விபரங்களுக்கு கடலுார் கடற்கரை சாலை சரவணபவ கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை வளாகத்தில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர்., கூட்டுறவு மேலாண்மை நிலையத்தை நேரிலோ அல்லது 04142 222619 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.