ADDED : ஏப் 02, 2025 05:48 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார் பஸ் நிலையத்தில் இருந்து கடலுார், விழுப்புரம், புதுச்சேரி, திருச்சி, நாகப்பட்டினம், சீர்காழி, தஞ்சாவூர், கும்பகோணம், வேலுார், சேலம் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்படுகின்றது.
தொடர் மழையால் பஸ் நிலையத்தில் இருந்து பஸ்கள் வெளியில் வரும் சாலையில் பல இடங்களில் மெகா சைஸ் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால், பஸ்கள் தள்ளாடி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளதால், டிரைவர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில காணப்படும் சாலையில் பள்ளம் ஏற்பட்டு பல மாதங்களாகியும், சீரமைப்பதில் அதிகாரிகள் அலட்சியம் காட்டி வருவது வாகன ஓட்டிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. எனவே, மெகா பள்ளங்களை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

