/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
குண்டு குழியுமான சாலை விபத்து அபாயம்
/
குண்டு குழியுமான சாலை விபத்து அபாயம்
ADDED : டிச 18, 2025 06:52 AM

புவனகிரி: கீரப்பாளையம் மூன்று வழி சந்திப்பில் சாலை சேதமடைந்து, சேறும் சகதியுமாக இருப்பதால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.
சிதம்பரத்திலிருந்து, புதுச்சேரி, சென்னை, சேலம், விருத்தாசலம் மற்றும் ஒரத்துார், சேத்தியாத்தோப்பு உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் மூன்று வழி சாலை உள்ளது. இந்த வழியாக தினசரி தனியார் மற்றும் அரசு பஸ்கள் இயக்கப்படுவதுடன், உள்ளூர் வாகனங்களும் அதிக அளவில் செல்கின்றன.
இந்த சாலைகள் குண்டும் குழியுமாக காட்சி அளிக்கின்றன. மேலும், தற்போது பெய்து வரும் மழையால் சாலை சேறும், சகதியுமாகி வாகனத்தில் செல்பவர்கள் வழுக்கி விழுந்து விபத்துக் குள்ளாகின்றனர்.
சிதம்பரம் நெடுஞ்சாலைத்துறையினர் பிரச்னைக்கு தீர்வு காண, அப்பகுதியினர் கோரிக்கை வைத்துள்ளனர்.

