தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ குண்டும் குழியுமான சாலை : மாணவர்கள் அவதி

குண்டும் குழியுமான சாலை : மாணவர்கள் அவதி

குண்டும் குழியுமான சாலை : மாணவர்கள் அவதி


ADDED : மார் 31, 2025 10:48 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 31, 2025 10:48 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சேத்தியாத்தோப்பு; தர்மநல்லுாரில் இருந்து தட்டானோடை செல்லும் ஏரிக்கரை பனஞ்சாலை ஜல்லிகள் பெயர்ந்து குண்டும் குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.

சேத்தியாத்தோப்பு அடுத்த தர்மநல்லுாரில் இருந்து தட்டானோடை செல்லும் ஏரிக்கரை பனஞ்சாலை போடப்பட்டு 10 ஆண்டுகளுக்கும் மேலாகிறது.

சாலையில் ஜல்லிகள் பெயர்ந்து குண்டும் குழியுமாக மாறி போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.

இந்த சாலை வழியாக முகந்தரியங்குப்பம், அகர ஆலம்பாடி, பெருவரப்பூர் பள்ளி மாணவர்கள் தர்மநல்லுார் அரசு ஆதிராவிடர் பள்ளிக்கு வந்து செல்கின்றனர். மாணவர்கள் சைக்கிளில் பள்ளிக்கு செல்லும் போது தவறி கீழே விழுந்து காயமடையும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறது. விருத்தாசலம் நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஏரிக்கரை பனஞ்சாலையில் புதிய தார்சாலை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us