ADDED : செப் 30, 2026 05:01 AM

அ நிறம் | அளவு
கடலுார்: கடலுார் கேப்பர்மலை மின்வாரிய மேற்பார்வையாளர் பொறியாளர் அலுவலகம் எதிரில் தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாநில துணைத் தலைவர் தேசிங்கு தலைமை தாங்கினார். நிர்வாகிகள் ராஜகோபால், தனசேகரன், வடிவேலன் முன்னிலை வகித்தனர். மாநில துணைப் பொதுச் செயலாளர் பழனிவேல் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.
சி.ஐ.டி.யூ., உதவி பொதுச் செயலாளர் திருச்செல்வம், மாவட்ட பொருளாளர் கோவிந்தராசு, மாநில செயற்குழு உறுப்பினர்கள் ஆறுமுகம், கோவிந்தசாமி, சி.ஐ.டி.யூ., இணை செயலாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, ஸ்டாலின் உட்பட பலர் பங்கேற்றனர்.
தமிழக மின்வாரியத்தை கார்ப்பரேட்களுக்கு தாரை வார்க்கும் தமிழக அரசை கண்டித்து கோஷமிடப்பட்டது.
