10ம் வகுப்பு மாணவி கர்ப்பம் பிளஸ் 2 மாணவருக்கு போக்சோ
10ம் வகுப்பு மாணவி கர்ப்பம் பிளஸ் 2 மாணவருக்கு போக்சோ
UPDATED : அக் 02, 2026 12:00 AM
ADDED : அக் 01, 2026 07:14 PM
அ நிறம் | அளவு
பண்ருட்டி: பத்தாம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய, பிளஸ் 2 மாணவர் மீது போலீசார் போக்சோ பிரிவில் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
பண்ருட்டி அடுத்த கிராமத்தை சேர்ந்தவர் 17 வயது மாணவர். பிளஸ் 2 படித்து வருகிறார். இவரும், அதே கிராமத்தை சேர்ந்த 16 வயது மாணவி, விழுப்புரம் அடுத்துள்ள கிராமத்தில் உள்ள பாட்டி வீட்டில் தங்கி 10ம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்த மாணவி கடந்த மே மாதம் வீட்டிற்கு வந்தபோது, பிளஸ் 2 மாணவருடன் பழக்கம் ஏற்பட்டது. அதில் இருவரும் நெருங்கி பழகியதில், மாணவி கர்ப்பமடைந்தார்.
இதுகுறித்து மாணவியின் தாய் அளித்த புகாரின் பேரில், பண்ருட்டி அனைத்து மகளிர் போலீசார், பிளஸ் 2 மாணவர் மீது போக்சோ பிரிவில் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
