/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
லட்சுமி சோரடியா பள்ளி மாணவருக்கு பாராட்டு
/
லட்சுமி சோரடியா பள்ளி மாணவருக்கு பாராட்டு
ADDED : செப் 20, 2025 07:16 AM

கடலுார் : கடலுார் லட்சுமி சோரடியா பள்ளி மாணவர், தேசிய அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றதையொட்டி பாராட்டு விழா நடந்தது.
கடலுார் லட்சுமி சோரடியா பள்ளியில் 9ம் வகுப்பு பயிலும் மாணவர் ஜெகநாதன். இவர் விழுப்புரத்தில் நடந்த மாவட்ட அளவிலான ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் போட்டியில், பங்கேற்று முதலிடம் பிடித்து பரிசு பெற்றார்.
இதன் மூலம் ஹரியானாவில் நடக்க உள்ள தேசிய அளவிலான போட்டிக்கு மாணவர் ஜெகநாதன் தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து பள்ளி நிர்வாகம் சார்பில் மாணவருக்கு பள்ளியில் பாராட்டு விழா நடந்தது.
பள்ளி தாளாளர் மாவீர்மல் சோரடியா, தலைமை ஆசிரியர் ஃபத்தாகான், முதல்வர் சந்தோஷ்மல் சோரடியா மற்றும் ஆசிரியர்கள் மாணவரை பாராட்டினர்.