/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சிலம்பத்தில் அசத்தல்; மாணவிகளுக்கு பாராட்டு
/
சிலம்பத்தில் அசத்தல்; மாணவிகளுக்கு பாராட்டு
ADDED : ஏப் 02, 2025 10:38 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்; மதுரையில் நடந்த மாநில அளவிலான சிலம்பம் போட்டியில் சாதனை படைத்த, கடலுார் புனித பிலோமினாள் பள்ளி மாணவிகளை பள்ளி நிர்வாகத்தினர் பாராட்டினர்.
கின்னஸ் ஒன் ஸ்டார் ஸ்போர்ட் ரெக்கார்ட்ஸ் அகாடமி சார்பில், மதுரையில் சிலம்பம் போட்டி நடந்தது.
இதில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
அதில், கடலுார் துறைமுகம் புனித பிலோமினாள் ஆரம்ப பள்ளி நான்காம் வகுப்பு மாணவிகள் காருண்யா, ரித்திகாஸ்ரீ தொடர்ந்து மூன்று மணி நேரம் சிலம்பம் சுற்றி சாதனை படைத்தனர்.
அவர்களை தலைமையாசிரியர் நிர்மலா மேரி மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.

